கால்நடை மருந்தகம் சேதம்
கடம்பத்துார்:கடம்பத்துார் கால்நடை மருந்தகம். 1967ல் திறக்கப்பட்டது. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு வந்து செல்கின்றனர்.
கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால், ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது.
மேலும், மழை நேரங்களில் கட்டடம் முழுதும் மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வரும் பகுதிவாசிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், கடம்பத்துார் கால்நடை மருந்தகத்தை ஆய்வு செய்து, புதிய கால்நடை மருந்தகம் கட்ட வேண்டும் என, கடம்பத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement