21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்
புதுடில்லி: டில்லி யமுனை நதிக்கரையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். டில்லியின் மோதிலால் நேரு தெருவில் உள்ள அரசு பங்களாவில், மன்மோகன் சிங் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பல தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் நிகாம்போத் காட் பகுதியில் உள்ள யமுனை நதிக்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
மன்மோகன் சிங் உடலுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு,துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து (14)
ஆரூர் ரங் - ,
28 டிச,2024 - 21:56 Report Abuse
ஓம் சாந்தி. அடுத்த எந்த ஜென்மத்திலாவது அடிமையாகப் பிறக்காமலிருக்கட்டும்.
0
0
Reply
renga rajan - ,
28 டிச,2024 - 18:19 Report Abuse
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
0
0
Reply
Anbilkathiravan - Trichy,இந்தியா
28 டிச,2024 - 17:11 Report Abuse
வணங்குகிறோம்
0
0
Reply
Mrs. Marie-Thérèse Evariste - Paris,இந்தியா
28 டிச,2024 - 17:06 Report Abuse
He had lifted up our Indian economic from crisis. Therefore,
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று".
is well applicable for this grand great scholar. May his soul rest in peace
0
0
Reply
Bhakt - Chennai,இந்தியா
28 டிச,2024 - 15:18 Report Abuse
நிரந்தர சுதந்திரம்.
0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28 டிச,2024 - 14:18 Report Abuse
தன் பொருளாதார அறிவை நாட்டுக்கு பயன்படுத்தினார் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு திருப்புனார் அதை மோடி அமுல் படுத்தி வெற்றி கண்டார். இருவரும் தனக்கு பணம் சில லட்சம் கோடி வேண்டும் என்று அலையத்தவர்கள். மன்மோகன் சிங் அவர்கள் ஆன்ம சாந்தி யடையட்டும் இல்லை வேறு லோகத்தில் நல்ல செயல் செய்ய பிறவி எடுக்கட்டும்.
0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
28 டிச,2024 - 14:14 Report Abuse
அட போங்கப்பா , எங்க ஈரோட்டு இளங்கோவனுக்கு நாப்பது குண்டு வெடிச்சோம் . இவர்க்கு 21 தானே
0
0
Reply
Mohan - Salem,இந்தியா
28 டிச,2024 - 14:03 Report Abuse
உயர்ந்த படிப்பும் திறமையும் இருந்தும்,துணிவற்று கோழையைப்போல சோனியாவை முடிவுகள் எடுக்க அனுமதித்த இமாலயத்தவறு, மன்மோகன் சிங் மீது உள்ள மரியாதையை உயிருள்ளபோதே முழுவதுமாக சோனியா & கோ போக்கியது.செத்த பின்தான் நரசிம்மராவின் மரியாதையை சோனியா & கோ வால் அழிக்க முடிந்தது.
0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
28 டிச,2024 - 13:49 Report Abuse
இனி வரும் காலங்களில் , இவரை போன்ற கல்வி அறிவும் , எளிமையும், நாட்டுப் பற்றும் , பிராக்டிகல் அறிவும் சிந்தனையும் , கொண்ட மனிதர்கள் , வருவது அரிது . சந்தேகம் . . . இப்போதெல்லாம் அறிவாளி என்றால் ஊரை அடித்து உலையில் போடுபவன்தான் . . . . . சுற்றிலும் கழுகுகளுக்கு மத்தியில் , சிறிது நாட்டுகாக்கவும் , மக்களுக்காகவும் , தனது அறிவால் , என்ன செய்ய முடியுமோ அதை தவறாமல் செய்தார் . . . . . இந்த காலத்தில் , பொருளாதாரம் படிப்பதற்கு , கல்லூரிகளே இல்லை - - பொருளாதாரம் என்ற சப்ஜெக்ட் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை . . . பின் எப்படி மாணவர்கள் சேருவார்கள் . பள்ளியில் கடைசி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் , வேறு எங்கும் கல்லூரிகளில் சேரமுடியாதவர்கள் பொருளாதாரம் சேருகிறார்கள் , அவர்களும் எதோ டிகிரி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் . . . , . அரசாங்கம்தான் , பொருளாதாரம் படிக்க ஊக்குவிக்க வேண்டும் . . பொருளாதாரம் படிப்பவர்களுக்கு , மன்மோகன்சிங் பெயரில் உதவி திட்டங்கள் அறிவிக்கலாம் . . .
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
28 டிச,2024 - 13:23 Report Abuse
நல்ல புனிதமான பிறவி கிடைக்கட்டும் ....
0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement