அரசு மருத்துவக் கல்லுாரியில்பொங்கல் விழா கொண்டாட்டம்

அரசு மருத்துவக் கல்லுாரியில்பொங்கல் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'வெய்யோன் 25' பொங்கல் பண்டிகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பூவதி முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகரன், துணை முதல்வர் டாக்டர் சாத்விகா, நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் செல்வராஜ், டாக்டர் மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், மருத்துவக்கல்லுாரி மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து ஆடிட்டோரியம் முன்பு புதுப்பானை, கரும்பு, மஞ்சள் வைத்து பொங்கல் வைத்தனர். பின்னர் மருத்துவ மாணவ, மாணவியருக்கு, மருதாணி வைக்கும் போட்டியும், கோலம் போடும் போட்டியும், இசை நாற்காலி போட்டியும் நடந்தது. தொடர்ந்து, பானை உடைக்கும் போட்டியில் மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் டாக்டர்கள் பானையை உடைத்தனர். மதியம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் பாரம்பரிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 350க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement