போலி ஆதார் பயன்படுத்தி ஏமாற்று வேலை; வங்கதேசத்தினர் 30 பேர் கைது!

11


பல்லடம்: திருப்பூர் பல்லடம் அருகே, போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மங்கலம், ஊத்துக்குளி பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் பேரில், சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக, வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரைக் கைது செய்த, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: பல்லடம் அருகே போலீசார் சோதனையில், போலி ஆதார் அட்டைகளைக் கொடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 30 பேர் சிக்கி உள்ளனர்.



சிலரிடம் ஆவணங்கள் இருந்தன. மற்றவர்கள் முறைகேடாக தங்கியிருந்தது தெரிந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement