முதல்வருக்கு ஆணவம் நல்லதல்ல: கவர்னர் ரவி
சென்னை: '' முதல்வருக்கு ஆணவம் நல்லது அல்ல ,'' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.
@1brஇந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 6ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் உரையை வாசிக்காமல் அவை துவங்கிய 3 நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ' தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையும் தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?' என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் ராஜ்பவன் எக்ஸ் தள கணக்கில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.
பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
ஆரூர் ரங் - ,
12 ஜன,2025 - 16:50 Report Abuse
எல்லா மாநில சட்டசபைகளிலும் கவர்னர் வருகையின் போதும் விடை பெறும் போதும் தேசீய கீதம் இசைக்ககப்படுகிறது. அது அரசியல் சட்டப்படி கட்டாயம். இங்கு மட்டும் இடைக்காலத்தில் வேறு ஒரு பாடல் (அரைகுறையாக) இசைக்கப்படுவது பிரிவினைவாத எண்ணத்தில்தான். கவர்னர் நிலைப்பாடு சரிதான்.
0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
12 ஜன,2025 - 16:28 Report Abuse
சட்டமன்றத்தில் தேசியகீதம்: கவர்னர் அல்லது ராஷ்டிரபதி வரும்பொழுதும், போகும்பொழுதும் தேசியகீதம் இசைக்கப்படவேண்டும் என்று பொதுவாக குறிப்பிடுவதற்கு சரியான விளக்கம்:
கவர்னர் அல்லது ராஷ்டிரபதி பங்கேற்கும் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், அந்த நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக துவங்க இருப்பதின் அடையாளமாகவும், இறுதியில் நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக முடிவுற்றதின் அடையாளமாகவும், துவக்கத்திலும், இறுதியிலும், இருமுறை தேசியகீதம் இசைக்கப்படவேண்டும். இதன் பொருள் அந்த இருமுறைக்கும் இடைப்பட்ட காலத்தில் நடப்பவை அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்கிறது அல்லது நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் அறிவிப்பு. அரசியல்சாசனப்படி மத்தியில் ராஷ்டிரபதியும், மாநிலத்தில் கவர்னரும் அரசியல் சாசனத்தின் காவலர்கள். அவற்றை மீறும் எந்த செயலையும் அவர்கள் அனுமதிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை.
1991 ஆம் ஆண்டுவரை இருமுறை தேசியகீதம் இசைக்கப்படுவதே தமிழகத்தில் வழக்கமாக இருந்துவந்தது. 1991 ஆம் ஆண்டு அன்றைய ஜெயாலலிதா அரசு சட்ட ஆலோசனை ஏதும் செய்யாமல் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் துவக்க அமர்வின்போது நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசியகீதம் இசைப்பதை தவிர்த்தது. அப்போது இருந்த கவர்னர் அந்த தவறை சுட்டிக்காட்டத் தவறிவிட்டார். பின்னர் அந்த தவறே 2024 வரை தொடர்கிறது. இதுவரை இருந்த கவர்னர்கள் அரசின் இந்த தவறான செயலை கண்டிக்க thodarnthu தவறிவிட்டனர். இன்று 34 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நம்மிடையே இருக்கும் கவர்னர் ரவி அவர்கள் அரசியல்சாசனப்படிதான் சட்டமன்றம் நடக்கவேண்டும் என்று வற்புறுத்துவது 100 சதவிகிதம் சரியான செயல். ஒரு தவறை தொடர்ந்து செய்துவருவதால் அது அரசியல் சாசனப்படி சரியாகிவிடாது.
0
0
Reply
Suresh Sivakumar - ,இந்தியா
12 ஜன,2025 - 16:26 Report Abuse
When you have an uncouth, illitrate, incompetent party ruling what more can we expect
0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
12 ஜன,2025 - 16:23 Report Abuse
மக்கள் முட்டாள்தனமா செஞ்ச தவறுக்கு ஓட்டுமொத்த மக்களும் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும்.
0
0
Reply
அப்பாவி - ,
12 ஜன,2025 - 16:15 Report Abuse
பதவிக்காலம் முடிஞ்ச பிறகும் ஒட்டிக்கிருப்பவருக்கு எவ்ளோ ஆணவம் இருக்கு?
0
0
ஆரூர் ரங் - ,
12 ஜன,2025 - 16:40Report Abuse
சக்கர நாற்காலியில் பயணிக்கும் முதுமை நிலைமையிலும் தானே முதல்வராக வேண்டும் என ஆசைப்பட்டார் ஒருவர்.
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
12 ஜன,2025 - 15:59 Report Abuse
தமிழ் நாட்டில் எவனும் பிரிவினையை ஆதரிப்பது கிடையாது ....அது அ.தி.மு.க., மற்றும் தி மு க வுக்கு ஓட்டுபோடுபவனுக்கும் பொருந்தும் ....ஆனால் மதம் மாற்றிகளுக்கு இது பொருந்தாது ....இது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவனுக்கு மாலை போட்டு வரவேற்ற மதம் மாற்றிகள் கூட்டம் .....தமிழ் தமிழன் தமிழன்டா என்று பேசி பிரிவினை ஆதரித்து கொள்ளை அடிக்கும் கூட்டம் ....இது அழியும் காலம் இப்பொது நெருங்கி விட்டது ...ரொம்ப நாட்களுக்கு இது தாங்காது ...
0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
12 ஜன,2025 - 15:45 Report Abuse
பதவி ஏற்கும்போது செய்யும் உறுதிப்பிரமாணம் உடனேயே காற்றில் கரைந்துவிட்டதா? அதனை செயல்படுத்தத் தவறுபவர்களுக்கு தண்டனை கிடையாதா?
0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
12 ஜன,2025 - 15:39 Report Abuse
சரியானபுத்திமதி, ஆணவம் பிடித்து அலையும்
0
0
Reply
GMM - KA,இந்தியா
12 ஜன,2025 - 15:35 Report Abuse
தேசிய கொடி, கீதம் குடிமகனை மதிக்க செய்யும் பொறுப்பு இந்திய ராணுவம். ராணுவம் உத்தரவை அமுல் படுத்தும் அமைப்பு. ஜனாதிபதி, கவர்னர் ... போன்ற அரசியல் சாசன பதவி நிகழ்ச்சி தொடக்க, முடிவில் தேசிய கீதம் கட்டாயம் என்றால் பின்பற்ற வேண்டும். சட்ட பேரவை அரசியல் சாசனம் கீழ் செயல் படுவது. தணிக்கை செய்யப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து தமிழக நிகழ்ச்சிக்கு பொருந்தலாம். பிற மாநில, தேசிய , சர்வதேச நிகழ்ச்சிக்கு பொருந்தாது.
0
0
Reply
ஆரூர் ரங் - ,
12 ஜன,2025 - 15:26 Report Abuse
மத்திய அரசு திமுக கட்சிக்கு தடை விதித்து விடும் என்ற பயத்தில் மட்டுமே தனி திராவிட நாடு கொள்கையை திமுக கைவிட்டது. மற்றபடி தேசத்தின் ஒற்றுமையில் அதற்கு எவ்வித சம்பந்தமும் சம்மதமும் கிடையாது. மனதளவில் இன்னும் பிரிவினைவாத எண்ணம் மறையவில்லை. ஒன்றை மனத்தில் கொள்ள வேண்டும். மாநிலங்கள் என்பவை மத்திய அரசின் தாற்காலிக கிளைகள் மட்டுமே. எப்போது வேண்டுமானாலும் கலைத்து அண்டை மாநிலத்துடன் இணைக்க அல்லது பல கூறுகளாகப் பிரித்து காணாமலடிக்கும் அரசியல் சட்ட உரிமை மத்திய அரசுக்குண்டு. ( காஷ்மீரின் கதி).எனவே ஆட்டம் போட வேண்டாம்.
0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement