பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு கிரேடு 1 அங்கீகாரம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், விமான நிலையங்கள் கவுன்சில் சர்வதேச (ஏ.சி.ஐ.,) அணுகல்தன்மை மேம்பாட்டு அங்கீகாரம் (ஏ.இ.ஏ.,) திட்டத்தின் கீழ் கிரேடு 1 அங்கீகாரத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாறியுள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இந்த அங்கீகாரம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய விமான நிலைய சூழலை உருவாக்குவதற்கான, பெங்களூரு விமான நிலையத்தின் முன்னெச்சரிக்கை முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இது குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வரவேற்கத்தக்க பயணத்தை அனுபவிப்பதை உறுதி செய்கிறது.
ஏ.இ.ஏ., திட்டத்தால்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், விமான நிலையங்களில் அணுகல்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.