இறகு பந்து போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவிகள்

பரங்கிப்பேட்டை; இறகு பந்துப்போட்டியில் வெற்றி பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை, பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

சிதம்பரத்தில், மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜனனி, ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் மூன்றாமிடமும், இரட்டையர் இறகு பந்து போட்டியில், ஜனனி, ஹேமாவதி இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

சாதனைப் படைத்த மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலஷ்மி, உதவி தலைமை ஆசிரியர் கலையரசி, உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி, கவுன்சிலர் அருள்முருகன், சமூக ஆர்வலர் கவுஸ், கற்பகம் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement