தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் பணிகள் துவங்குவது எப்போது?
கடலுார்; தமிழகத்திலுள்ள அனைத்து சட்டபை தொகுதிகளிலும் மினிஸ்டேடியம் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.
அதன்படி, 234 தொகுதிகளில் 61தொகுதிகளில் ஸ்டேடியம் உள்ளதால், மீதமுள்ள 173தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்டமாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி, துணைமுதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி உள்ளிட்ட 10 தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கியது.
இரண்டாம் கட்டமாக, 2024ல் கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உட்பட 22 தொகுதிகளில் தலா 3கோடி ரூபாய் வீதம் 66கோடி ரூபாய் மதிப்பில் மினிஸ்டேடியம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் வழுதலம்பட்டு ஊராட்சியிலும், பண்ருட்டி தொகுதியில் காடாம்புலியூர் ஊராட்சியிலும் மினிஸ்டேடியம் அமைப்பதற்காக அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்தனர்.
இடம் தேர்வு செய்யப்பட்டதோடு, மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் விளையாட்டுவீரர்கள் அதிருப்தியடைந்தனர்.
மினிஸ்டேடியம் அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.