தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை தரணும்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

4

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி சந்திப்பு நடத்தினர். அப்போது தமிழகத்துக்கான நிலுவைத்தொகையை விடுவிக்க வலியுறுத்தினர்.


தமிழகத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒதுக்க வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து மனு அளித்தார்.


அப்போது தி.மு.க., எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உடன் இருந்தனர். கடந்த ஜன.,14ம் தேதி முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement