கோவையில் ஐ.டி நிறுவனம் மூடல்: பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கோவையில் செயல்படும் வெவ்வேறு கிளைகளிலும், வீட்டில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.
இவர்களின் பணி என்பது அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் எடுப்பது. இந்த கம்பெனியில் 2 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரியும் ஊழியர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் நிறுவனம் மூடப்படுவதாக, ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் மெயில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இத்தனை ஆண்டு காலம் வேலை பார்த்ததற்கான பணிப்பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதும் ஊழியர்களுக்கு தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர், இன்று திரண்டு கோவை கலெக்டர் அலுவலகம் வந்து முறையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement