திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை
திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
டாக்டர்கள் செய்துள்ளனர்.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது. அரவிந்த்குமார், குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள்
பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கண்புரை பிரச்னை இருப்பதை கண்டறிந்து உடனே கண்பிரிவு டாக்டர்களை சிகிச்சையளிக்க பரிந்துரைத்தனர். கண்பார்வை பிரிவு டாக்டர்கள் குழந்தைக்கு லென்ஸ் பொருத்தலாமா என
ஆலோசித்தனர். 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் சிகிச்சை செய்ய முடியும் என்பதால் தற்போது கண்புரைஅறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து முதலில் வலது கண்ணில் சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து ஆரோக்கியமான நிலையில்
உள்ள குழந்தைக்கு கண் பார்வையும் கிடைத்தது. 1 மாதம் கழித்து இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்கு கண்புரை
சிகிச்சை செய்துள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சை குழுவில் உள்ள குழந்தைகள், மயக்கவியல், கண்பார்வைபிரிவுகளை சேர்ந்த டாக்டர்களை பாராட்டினர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.