தமிழக முதல்வருடன் தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு

புதுச்சேரி : விழுப்புரத்தில் தமிழக முதல்வரை, புதுச்சேரி நிர்வாகிகள் சந்தித்து புதுச்சேரி நிலவரம் குறித்து பேசினர்.

தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த கோவிந்தசாமிக்கு மணி மண்டபம், இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 பேருக்கு நினைவிடம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை விழுப்புரம் வந்தார்.

அவருக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் விழுப்புரம் சுற்றுலா மாளிகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்தும், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பின்போது, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.

Advertisement