முறைகேடு புகார்களுக்கு ஆளான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றம்

சென்னை: முறைகேடு புகாரில் சிக்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11 பேரை வேறு மாவட்டங்களில், மூன்றாம் நிலை நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களில் திளைக்கும் அதிகாரிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி நிர்வாகங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கவுன்சிலர்களுடன் இணைந்து, சாலை அமைத்தல், கட்டடம் கட்டுவதில் விதிகளை மீறுதல், சீல் வைக்கப்பட்ட வீடுகளை திறப்பது போன்றவற்றில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டறியப்பட்டனர்.
அப்படி கிடைத்த பட்டியல் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி உறுதி செய்யப்பட்டது. முடிவில் அதில் இடம் பெற்றிருந்த அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டது. இதன்படி சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக இருக்கும் அதிகாரிகள் 11 பேர், திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மூத்த அதிகாரிகள் இதுபோன்று மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி தனித்த சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டதால், இதனால் வரை இங்கு பணியாற்றிய அதிகாரிகள் யாரும் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படவில்லை. 2023ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தின் அடிப்படையில் தற்போது தான் முதல் முறையாக பிற மாவட்டங்களுக்கு அதிகாரிகள் மாறுதல் செய்யப்படுகின்றனர்.
"அவர்கள் களத்தில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஊதியம் முறையாக கிடைத்து விடும். மேலும், இதுபோன்ற மூன்றாம் நிலை நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அவர்களுக்கு வேலையில் அதிக கவனம் ஏற்படும் என்றும், அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்," என்கின்றனர். அதிகாரிகள்.
இதனிடையே, இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அதிகாரிகளை கருப்புபட்டியலில் வைக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், 6 மாதங்களிலோ அல்லது மேலதிகாரிகள் மாறினால், ஓராண்டுக்குப் பிறகோ, மீண்டும் இந்தப் பணிக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் பணியிற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.










மேலும்
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; முன்னாள் காங்., எம்.பி.,க்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தல்
-
பலாத்கார வழக்குகளில் இன்று கைதானவர்கள்!
-
ஆடி 'ஆர்.எஸ்., க்யூ8 பெர்பார்மென்ஸ்' அதிசக்தி வாய்ந்த வி8 இன்ஜின்
-
பி.ஒய்.டி., சீலையன் 7 ரொம்ப 'சைலன்ட்', வேகத்தில் படு 'வயலென்ட்'
-
அதானிக்கு எதிரான புகார்: இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா
-
ரெனோ கார்களுக்கு கூடுதல் அம்சங்கள்