தை அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

தை அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை


தர்மபுரி,:தை அமாவாசையையொட்டி, தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மன் வீதி உலா வந்தது. இதேபோல், எஸ்.வி.,ரோடு பூவாடைக்காரி அம்மன், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் மஹாலிங்கேஸ்வரர் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் சித்தர் பீடம் கோவில் உள்பட, பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement