டேங்க் ஆப்ரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்



டேங்க் ஆப்ரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலம்:தாளவாடியில், டேங்க் ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாளவாடி பி.டி.ஓ., அலுவலகம் முன் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பகுதிநேர துாய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச கூலியாக, 18 ஆயிரம், அகவிலைப்படி, 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கிட வேண்டும். ஊராட்சி தினக்கூலி பணியாளர்களின் குறைந்தபட்ச கூலியை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஓ.ஹெச்.டி.,ஆப்ரேட்டர்களுக்கு தொகுப்பு தொகையாக 50 ஆயிரம், மாதம் 2,000 ரூபாய் ஓய்வூதியம், ஓய்வு பெற்ற நாள் முதல் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Advertisement