காலே டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

காலே: இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 3ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. கவாஜா (232), கேப்டன் ஸ்மித் (141), இங்லிஸ் (102) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 654/6 ('டிக்ளேர்') ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44/3 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (9), கமிந்து (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (15), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (22) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. மழை நீடித்ததால் 3ம் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. சண்டிமால் (63), குசால் மெண்டிஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், குனேமன் தலா 2, லியான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement