அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்.,; ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853741.jpg?width=1000&height=625)
தேனி: அ.தி.மு.க.,வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செய்திகளில் வெளியானது போன்று நான் பஞ்சமி நிலத்தை வாங்கவில்லை. பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசின் நிதி மூலம் நிறைவேற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா தான். யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், இதற்காக இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா வைக்கப்பட்டது. எனவே, பல்வேறு கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். விவாதங்களுக்கு எல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்சியில் மிகவும் மூத்த தலைவர் செங்கோட்டையன் தான். அ.தி.மு.க., ஒன்றாக இணைய வேண்டும் என்று மனசாட்சிப்படி இருப்பவர். ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். என்னை தோற்கடிப்பதற்காக, ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தார் ஆர்.பி., உதயகுமார். கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார், இவ்வாறு அவர் கூறினார்
கேவியட் மனு தாக்கல்
இதற்கிடையே, ஓ.பி.எஸ்., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடலாம் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அ.தி.மு.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு அப்பீல் செய்தால், தங்கள் தரப்பையும் கேட்டபிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி, ஓ.பி.எஸ்., தரப்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![Tamil Inban Tamil Inban](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Madras Madra Madras Madra](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Anbilkathiravan Anbilkathiravan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Vijay D Ratnam Vijay D Ratnam](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
பெங்களூரு மெட்ரோ கட்டணம் 30 சதவீதம் குறைப்பு
-
நடிகை கங்கனா ரணாவத் துவங்கும் உணவகம் : நாளை (பிப்.14) திறப்பு
-
15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிப்பு
-
தே.ஜ., கூட்டணி 400 இடம் பெறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: இ.பி.எஸ்., கருத்து
-
காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்