இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிட்டார் அதானி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853743.jpg?width=1000&height=625)
கொழும்பு: இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்வதாக, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
காற்றாலை அமைக்க இலங்கை அரசு மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. இதன் படி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரம் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது.
அதேபோல், இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.
சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அதானி குழுமத்தின் திட்டங்களை இலங்கை மறுபரிசீலனை செய்ய துவங்கியது. இதற்கிடையே கடந்த மாதம் மின் திட்டச்செலவை குறைக்க, அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று புதிதாக அமைந்த அரசு அறிவித்தது.
அடுத்தடுத்து சர்ச்சைகள் எழும் நிலையில், இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதானி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் இரண்டு காற்றாலை அமைக்கும் திட்டம் மற்றும் வினியோக திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்கிறோம். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் இணைந்து பணியாற்ற உறுதி அளிக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
![Velan Iyengaar Velan Iyengaar](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![தத்வமசி தத்வமசி](https://img.dinamalar.com/data/uphoto/78240_125720592.jpg)
மேலும்
-
பெங்களூரு மெட்ரோ கட்டணம் 30 சதவீதம் குறைப்பு
-
நடிகை கங்கனா ரணாவத் துவங்கும் உணவகம் : நாளை (பிப்.14) திறப்பு
-
15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிப்பு
-
தே.ஜ., கூட்டணி 400 இடம் பெறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: இ.பி.எஸ்., கருத்து
-
காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்