அரசியல்வாதிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் 'ஐடியா'

15


வாஷிங்டன்: நாட்டில் ஊழலை ஒழிக்க அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.


அமெரிக்காவில் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக, பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டு உள்ளார். அரசின் செலவை குறைக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவியை நிறுத்தி உள்ளார்.


இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழலை ஒழிப்பதற்காக, பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளால் பொது மக்களுக்கு ஆயிரம் மடங்கு செலவாகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Advertisement