நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு

ஜெய்ப்பூர்: '' விஞ்ஞானி ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிவதற்கு முன்னரே, நமது வேதங்களில் அது குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது,'' என ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாகு கிஷன்ராவ் பக்டே கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலையின் பிராந்திய மையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: அறிவு பாரம்பரியத்தில் உலகில் சிறந்த நாடாக இந்தியா விளங்கியது. ஒட்டு மொத்த உலகிற்கும் தசம அமைப்பை இந்தியா தான் அளித்தது. புவியீர்ப்பு விசை குறித்த ஆய்வை ஐசக் நியூட்டன் உலகிற்கு தாமதமாகத் தான் சொன்னார். ஆனால், இந்தியாவில் இது வேத புத்தகங்களில் நீண்ட காலத்திற்கு முன்பே கூறப்பட்டு விட்டது.
மின்சாரம், விமானங்கள் குறித்து ரிக் வேதம் உள்ளிட்ட நமது வரலாற்று புத்தகங்களில் குறிப்புகள் உள்ளன. மஹரிஷி பரத்வாஜர் புத்தகத்தில் விமானம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு இது குறித்து நாசா கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியர்களின் அறிவை கட்டுப்படுத்த முயற்சி நடந்தது. எனவே, இந்திய மாணவர்களின் அறிவுசார் திறனை அதிகரிப்பதும், அவர்களை இந்திய அறிவுடன் இணைப்பதும் முக்கியம். நாலந்தா மற்றும் தக்சிலா பல்கலை பற்றி அனைவரும் தெரிந்து இருப்பார்கள். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்துஇங்கு படித்தனர். அப்போது சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மொழியும் இல்லை. கில்ஜி ஆட்சியின் போது, நாலந்தா பல்கலை அழிக்கப்பட்டது. தற்போது புதிய நம்பிக்கையுடன் நாலந்தா பல்கலை மீண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.











மேலும்
-
கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது
-
பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது
-
பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்
-
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி: மக்காச்சோளம் மீதான செஸ் வரி வாபஸ்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்