கலெக்டர் அலுவலகத்தில்  விவசாயிகள் புகார் மனு

விழுப்புரம்: தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்லும் மின் கம்பங்களை அகற்றுமாறு வீரங்கிபுரம் விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலு தலைமையில் விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவில், எங்கள் கிராமத்தில் தாழ்வான நிலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது பற்றி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவையற்ற மின்கம்பத்தை அகற்றி வீடு கட்ட வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement