மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த தனி நிறுவனம் அமைக்க அரசு திட்டம்
பெங்களூரு: பெங்களூரில் மேற்கொள்ளப்படும் சாலை, மேம்பாலம் சீரமைப்பு உட்பட மேம்பாட்டுப் பணிகளை நிர்ணயித்த காலத்தில் முடிக்க, பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வாரியம் என, மற்ற அரசு துறைகள் ஒருங்கிணைப்பில், தனி நிறுவனம் அமைக்க மாநில அரசு தயாராகிறது.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி, குடிநீர் வாரியம், பி.டி.ஏ., உட்பட அரசின் வெவ்வேறு துறைகள் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், நிர்ணயித்த நேரத்தில் முடிவது இல்லை என, மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், திட்டங்களின் செலவும் அதிகரிக்கிறது. தேவையற்ற சுமை ஏற்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் அமைத்துள்ளது. அதே போன்று கர்நாடக அரசும், தனி நிறுவனம் அமைக்க தயாராகிறது.நடப்பாண்டு மாநில அரசு பட்ஜெட்டில், பெங்களூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.
இந்த நிறுவனம் அமைத்தால், அதிக தொகையில் செயல்படுத்தப்படும் சுரங்க சாலை, ஸ்கை டெக், ஒயிட் டாப்பிங், பெங்களூரு பிசினஸ் காரிடார், பிராண்ட் பெங்களூரு திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
இது போன்ற திட்டங்களை செயல்படுத்த, நிதி நிறுவனங்களிடம் கடன் பெற, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தனி நிறுவனம் துவக்கினால், கடன் பெறுவது எளிதாக இருக்கும். பணிகளையும் விரைந்து முடிக்கலாம்.
மார்ச் இறுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிவடைகிறது. இதனால் அலுவலக கட்டடம், தயார் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்திலேயே, மாநில அரசு புதிதாக அமைக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் செயல்படும் வாய்ப்புள்ளது. இந்த கம்பெனிக்கு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்