சாக்கடையில் வீசப்பட்ட இறந்த பெண் கரு

தாவணகெரே: தாவணகெரே மாவட்டம், ஹரிஹர் டவுனின் ஜே.சி., லே - அவுட்டில் நேற்று காலை பெண் குழந்தை கரு ஒன்று, சாக்கடையில் கிடந்துள்ளது. இதை பார்த்த பக்கத்து கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், மகளிர் - குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். மீட்கப்பட்ட கரு, தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கருவில் இருக்கும் குழந்தை பெண் என்பதை கண்டறிந்து, இங்கு வீசினார்களா அல்லது கள்ளத்தொடர்பால் கருவுற்று, அதை துாக்கி வீசினார்களா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், கருவை வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஹரிஹர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement