அரசு கல்லுாரிகளில் திறமையை மேம்படுத்தும் படிப்புகள்

பெங்களூரு: ''மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு சரி சமமாக திறமை மேம்பாட்டு படிப்புகளை அரசு பொறியியல் கல்லுாரிகளில் துவக்க அரசு முடிவு செய்துள்ளது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் மஞ்சுநாத் பண்டாரியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு, சரி சமமாக திறமை மேம்பாட்டு படிப்புகளை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தாவணகெரே, சிந்தாமணி கல்லுாரிகளில் திறமை மேம்பாட்டு படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு மாணவர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மாநிலத்தின் 11 கல்லுாரிகளில், இந்த படிப்புகளை துவக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக ஐந்து கல்லுாரிகளில் துவக்குவோம். வரும் நாட்களில் மற்ற கல்லுாரிகளிலும், இத்திட்டம் விஸ்தரிக்கப்படும்.
தனியார் கல்லுாரிகள், திறமை மேம்பாட்டு படிப்புகளை நடத்துகின்றன. இதே காரணத்தால், மாணவர்கள் அரசு கல்லுாரிகளை விட, தனியார் கல்லுாரிகளை அதிகம் விரும்புகின்றனர்.
இதை தவிர்க்கும் நோக்கில், அரசு உலக வங்கியில் கடன் பெற்று, திறமை மேம்பாட்டு கல்லுாரிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., - மஞ்சுநாத் பண்டாரி: அரசு பொறியியல் கல்லுாரிகள், ஏன் மேம்படவில்லை; அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஆயிரக்கணக்கான சீட்கள் காலியாக இருப்பது ஏன்?
அமைச்சர் சுதாகர்: அரசு பொறியியல் கல்லுாரிகளில், திறமை மேம்பாட்டு படிப்புகளை துவக்குவோம். அரசு கல்லுாரிகளுக்கு மாணவர்களை ஈர்க்க, நடவடிக்கை எடுப்போம்.
மஞ்சுநாத் பண்டாரி: தனியார் கல்லுாரிகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தையே, விஸ்வேஸ்வரய்யா டெக்னாலஜி சென்டர்களிலும் நிர்ணயம் செய்யுங்கள். மாநிலத்தில் எத்தனை அரசு கல்லுாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன?
அமைச்சர் சுதாகர்: அரசு சார்ந்த 16 கல்லுாரிகள், தனியார் நிதியுதவி பெறும் எட்டு கல்லுாரிகள், அரசு நிதியுதவி பெறாத 138 தனியார் கல்லுாரிகள் உள்ளன. 16 சிறுபான்மையினர் கல்லுாரிகள் உள்ளன.
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்