வெறி நாய் கடித்து 4 பேர் காயம்

அரூர்: அரூர் அருகே வெறி நாய் கடித்ததில், 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது வளர்ப்பு நாய், நேற்று காலை, 8:30 மணிக்கு, தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, 60, பிரதாப், 35, இந்திராணி, 45, மற்றும், 2 வயதுடைய குழந்தையை கடித்தது. இதில் காயமடைந்த, 4 பேரும், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாயை பிடிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement