பயணிகளின் பாதுகாப்பு; பஸ் ஸ்டாண்டில் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, தர்மபுரி கலெக்டர் சதீஸ் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி டவுன் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டில், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் பஸ்களின் செயல்பாடுகள், பஸ் ஸ்டாண்டில், இரவு நேரத்தில் மின் விளக்கு, குடிநீர், கழிப்பிடம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை உள்ளிட்டவை குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement