ரூ.13.20 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்
அரூர்: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 13.20 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 82 விவசாயிகள், 160 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,909 முதல், 7,689 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 160 குவிண்டால் பருத்தி, 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 24 விவசாயிகள், 32 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,099 முதல், 7,299 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 32 குவிண்டால் பருத்தி, 2.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்