இளம்பெண் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு மாரியம்மன் கோவிலுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 33. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும், குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் பவித்ரா வீட்டோடு இருந்து வந்தார். கடந்த, 7 ல் காலை பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று வங்கியில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement