நிச்சயதார்த்த நிகழ்வில் தந்தை திடீர் மரணம்; உடல் முன்னிலையில் நடந்த மகன் திருமணம்

போச்சம்பள்ளி: மத்துார் அருகே நிச்சயதார்த்த நிகழ்வில் மயங்கி விழுந்து தந்தை மரணமடைந்த நிலையில், அவரது உடல் முன் கண்ணீர் மல்க, ஒருநாள் முன்னதாக, மணமகளுக்கு மகன் தாலிகட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரை அடுத்த, பெருகோபனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ், 60, ஜவுளி வியாபாரி. இவரின் மனைவி மஞ்சுளா, 48; தம்பதியரின் மூத்த மகன் மணிஷ், 26; இவருக்கும் பர்கூரை சேர்ந்த காவ்யபிரியா, 21, என்பவருக்கும், கண்ணன்டஹள்ளியில் ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்த ஏற்பாடு நடந்தது. உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாட்டில் மூழ்கியிருந்தனர்.
இந்நிலையில் வரதராஜ் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர் பரிசோதனையில் மாரடைப்பால் இறந்தது தெரியவர, மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணிஷூக்கு திருமணம் செய்ய நீண்ட நாட்களாக பெண் தேடியுள்ளனர். இந்நிலையில் பெண் கிடைத்ததால், திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்தி முடிக்க வரதராஜ் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், திருமணத்தை பார்க்க முடியாமல் உயிரிழக்க நேரிட்டது, மனைவி, மகன், உறவினர்களையும் மாளாத வேதனையில் தள்ளியது. இதனால் வரதராஜ் உடல் முன்பே திருமணத்தை நடத்த, இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்தனர்.
இதன்படி வரதராஜ் உடலுக்கு பட்டு வேட்டி, சட்டை உடுத்தி, அவரின் கையில் தாலி கயிறை வைத்து, மகன் மணிஷ் எடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டினார். அப்போது உறவினர்கள் கண்ணீர் மல்க வாழ்த்தியது சொல்ல முடியாத நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வரதராஜ் உடலுக்கு நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.
இது குறித்து மணிஷ் கூறுகையில், ''என் தந்தையின் நீண்ட நாள் நினைவு கனவாகி, கானல்நீராகி விடக்கூடாது. அதற்காக தந்தை உடல் முன், கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டேன். திருமண நாளில் தந்தையின் இறுதிச்சடங்கு நடந்தது மிகுந்த மனவருத்தம், தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தி விட்டது,'' என்றார்.
வாசகர் கருத்து (2)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
11 மார்,2025 - 12:04 Report Abuse

0
0
Maheswari - ,
11 மார்,2025 - 18:48Report Abuse

0
0
Reply
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement