2 மாணவிக்கு பாலியல் தொல்லை; முதியவர், டிரைவருக்கு போக்சோ

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத், 24. இவர், பிளஸ் 1 படிக்கும், 15 வயது மாணவியிடம் பேச்சு கொடுத்து கடந்த, 7ல் ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அம்மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை அவரது தாய் கேட்டபோது, தனக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். மாணவியின் தாய் புகார் படி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, ஆட்டோ டிரைவர் வினோத்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே கே.என்.தொட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 65. கூலித்தொழிலாளி; இவர், அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது மாணவியை கடந்த, 3ல், கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாய் புகார் செய்தார். விசாரணையில், மாணவி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவருக்கு நாகராஜ், 10 ரூபாய் கொடுத்து சிறுமியை அழைத்து வர செய்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், போக்சோவில் வழக்குப்பதிந்த போலீசார், நாகராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement