முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஓசூர்: ஓசூர், மாநகர, தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ராம்நகரில், மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி முன்னிலை வகித்தனர்.

மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் திராவிடர் கழக மாநில துணை பொதுச்செயலாளர் வக்கீல் மதிவதனி ஆகியோர் பேசினர். மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமார், மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement