சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

உடுமலை: உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனுாரில், கூர்மை சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. அன்று காலையில் விஷ்வக்சேன ஆராதனை, வாசுதேவ சுத்தி, புண்யாகவாசனம், சுதர்ஷன ேஹாமம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன.
காலை, 9:30 மணிக்கு விமான கலசம், பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து 8ம் தேதி மாலையில் மகா சுதர்ஷன ேஹாமம், மகா சங்கல்பம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், முதற்கால வேள்வி நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலையில் திருப்பல்லாண்டு, திருப்பாவை சிறப்பு பாராயணம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், மூர்த்தி ேஹாமம், காலை 9:00 மணி அளவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் விஷ்வரூப தரிசனம், மகா ஆரத்தி, மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முதல், 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது.
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்