மணிமலை பகுதியில் பட்டா வழங்க எதிர்ப்பு

ஈரோடு: சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு, கொமராபாளையம் கிராம மக்கள், மணிமலை கருப்பண்ண சுவாமி கோவில் நிர்வாகி பழனிசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: மணிமலையில் கருப்பண்ண சுவாமி கோவில் பழமையானது. 160 ஏக்கர் வனப்பகுதியில் உள்ள இவ்விடத்தில் வனத்துறையினர் மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். தற்போது சில அரசியல் கட்சியினர், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மணிமலை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக மரங்களை அழித்து வருகின்றனர். மனைகளை விற்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் வீட்டுமனை பட்டா பெறுபவர்கள், குடியேறும் பட்சத்தில் வன உயிரினங்கள் அழியும். வனப்பகுதி பாதிக்கும். எனவே, மணிமலைப்பகுதியில் பட்டா வழங்கவும், வீட்டுமனை அமைக்கவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement