கம்பத்தில் மோதிய வேன்; மின் வினியோகத்தில் தடை

ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம் பாளையம், சிந்தன் நகர் பகுதியில் நேற்று மாலை, 6:50 மணியளவில் ஆம்னி வேன், தாறுமாறாக சென்று மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில் வேன் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.

இதனால் அப்பகுதியில் இரவு, 7:00 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு, 10:15 மணியை கடந்தும், மின்சாரம் கிடைக்காததால், சிந்தன் நகரில் நான்கு வீதி மக்களும் அவதிக்கு ஆளாகினர்.

Advertisement