டுபிளசி துணைக் கேப்டன்

புதுடில்லி: டில்லி அணி துணைக் கேப்டனாக டுபிளசி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன் டுபிளசி 40. ஐ.பி.எல்., தொடரில் கடந்த 2012 முதல் சென்னை அணிக்காக விளையாடினார். 2022ல் பெங்களூரு அணிக்கு சென்ற டுபிளசி, 3 சீசனில் கேப்டனாக செயல்பட்டார். 2022, 2024ல் அணியை 'பிளே ஆப்' சுற்றுக்கு கொண்டு சென்றார்.
பின் பெங்களூரு அணி இவரை விடுவித்தது. அடுத்து நடந்த ஏலத்தில் முதல் சுற்றில் இவரை யாரும் வாங்கவில்லை. பின், டில்லி அணி ரூ. 2 கோடிக்கு டுபிளசியை வாங்கியது. இதனால் இவர் புதிய கேப்டன் ஆகலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. மாறாக, ஐ.பி.எல்., தொடர் 2025 சீசனில் டில்லி அணி புதிய கேப்டனாக அக்சர் படேல் 31, நியமிக்கப்பட்டார்.
தற்போது துணைக் கேப்டனாக டுபிளசி நியமிக்கப்பட்டுள்ளார். 135 போட்டியில் மொத்தம் 4571 ரன் எடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,'' டில்லி அணி துணைக் கேப்டனாக தேர்வானது மகிழ்ச்சி. சவால்களை ஏற்க தயாராக உள்ளேன். அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். டில்லி அணிக்காக விளையாடும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,'' என்றார்.
மேலும்
-
நெல்லையில் பயங்கரம்; ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு