சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * சுவிட்சர்லாந்து பாட்மின்டன் துவக்கம்

பசல்: சிந்து, லக்சயா, பிரனாய் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் சுவிட்சர்லாந்து பாட்மின்டன் தொடர் மார்ச் 18ல் துவங்குகிறது.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் மார்ச் 18ல் துவங்குகிறது. இந்திய நட்சத்திரங்களுக்கு ராசியான இத்தொரில் இம்முறை பெண்கள் ஒற்றையரில் சிந்து, மாளவிகா, ஆகர்ஷி, ரக்சிதா, அனுபமா நேரடியாக முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். கடந்த வாரம் ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து.
இம்முறை தனக்கு ராசியான சுவிட்சர்லாந்து மண்ணில் களிமிறங்குகிறார் சிந்து. கடந்த 2019ல் இங்கு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவர், 2022ல் சுவிட்சர்லாந்து தொடரில் கோப்பை வென்றார்.
இந்த ராசி கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டு வர முயற்சிக்கலாம். எனினும் முதல் சுற்றில் சிந்துவுக்கு, சக வீராங்கனை மாளவிகா சவால் கொடுக்க உள்ளார்.
சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாளவிகா, சிந்துவை சமாளிப்பாரா என தெரிய வரும். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், அனுபவ பிரனாய், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் லக்சயா, பிரனாய் என இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர்.
பெண்கள் இரட்டையரில் திரீசா-காயத்ரி, பிரியா-ஆர்த்தி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சதிஷ் குமார்-வரியாத் ஜோடியும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
மேலும்
-
நெல்லையில் பயங்கரம்; ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு