செஸ்: ஹரிகா மீண்டும் 'டிரா'

நிகோசியா: சைப்ரஸ் செஸ் 2வது சுற்று போட்டியை இந்தியாவின் ஹரிகா 'டிரா' செய்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதற்கான போட்டிகள் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. சைப்ரசில் 4ம் கட்ட போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 2வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலாகிடோ மோதினர். ஹரிகா வெள்ளை நிற காய்களுடன் விளயைாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 42வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யா, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். ஹரிகா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 40வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இரண்டு சுற்றுகளின் முடிவில் சீனாவின் ஜு ஜினர் (2.0 புள்ளி), கிரீசின் ஸ்டாவ்ரூலா (1.5) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ஹரிகா, திவ்யா, மரியா முசிசுக், அன்னா முசிசுக் உள்ளிட்ட 6 பேர் தலா 1.0 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும்
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ