கிணற்றில் விழுந்தவர் மீட்பு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அவலுார்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது வீட்டின் கிணற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30, மணியளவில் அந்த வழியாக குடிபோதையில் வந்த நபர் தவறி கிணற்றில் விழுந்தார்.
தகவல் அறிந்த மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை மீட்டனர்.
விசாரணையில் கிணற்றில் விழுந்த நபர் வேலுார், சதுப்பேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், 58; என்பதும், அவலுார் பேட்டையில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
உடன் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் பயங்கரம்; ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
Advertisement
Advertisement