காணையில் இப்தார் நோன்பு அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

விழுப்புரம்: காணையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், அப்துல் சத்தார் காஷீபி முன்னிலை வகித்தனர். தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அமைச்சர் பொன்முடி இப்தார் நோன்பு திறப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச் சந்திரன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், ஆர்.பி. முருகன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், செயலாளர் நைனாமுகமது, இந்திய கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ