அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி தாவரவியல் துறை சார்பில், தாவரவியல் துறையில் புதுமை மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு, தாவரவியல் துறை தலைவர் தனம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் துறை தலைவர் தனஞ்செழியன் வாழ்த்திப் பேசினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் தனவேல் தொடக்கவுரையாற்றினார். இணைய வழி மூலம், ஆய்வு உரையினை சாம்பியா நாட்டின் தி காப்பர்பெல்ட் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் சுப்பையா ராமசாமி, சென்னை நந்தம்பாக்கம் ஆண்கள் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கந்தவேல், அமெரிக்கா மருந்தியல் பல்கலைக்கழக பேராசிரியர் பொன்மாரி ஆகியோர், தாவரவியலில் புதுமை மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து உரையாற்றினர்.
ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுகலை, இளங்கலை மாணவர்கள் பலர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர் மணிகண்டன், பிரகாஷ், நடராஜன், உதவி பேராசிரியர் பரிமளா ஆகியோர் செய்திருந்தனர். மணிகண்டன் நன்றி கூறினார்.
மேலும்
-
நெல்லையில் பயங்கரம்; ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு