செய்களத்துாரில் கல்லுாரி செயல்பட நடவடிக்கை
மானாமதுரை : மானாமதுரையில் புதிய கலை கல்லுாரிக்கு இடம் தேர்வு செய்வதில் குழப்பம்ஏதும் இல்லை என்று வருவாய் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மானாமதுரையில் அரசு கலைக்கல்லுாரி இல்லாததால் மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளைச்ச சேர்ந்த மாணவர்கள் சிவகங்கை, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று கல்லுாரி படிப்பை படிக்க வேண்டிய நிலை உள்ளது.
மானாமதுரையில் புதிய அரசு கலைக்கல்லுாரி துவங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து கடந்த பட்ஜெட்டில் மானாமதுரையில் புதிய அரசு கலைக்கல்லூரி துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
வரும் கல்வி ஆண்டு முதல் மானாமதுரையில் 5 பாட பிரிவுகளுடன் ஆண், பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை, தாயமங்கலம் ரோட்டில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் எதிரே கல்லுாரி கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கி புதிதாக கட்டடம் கட்டப்படும் வரை செய்களத்துார் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கட்டடத்தில் தற்காலிகமாக கல்லுாரி செயல்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
திருச்சியில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை
-
மார்ச் 21-ஆம் தேதியை 'மண் காப்போம் தினமாக' அறிவித்தது அட்லாண்டா!
-
வட மதுரையில் பயங்கர வெடிச்சத்தம்; திடீர் பரபரப்பு
-
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
-
நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு
-
தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?