பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளௐரை சுற்றி வளைத்து சி.பி.ஐ., விசாரணை

காரைக்கால் : காரைக்காலில் ஆய்வு பணிக்கு சென்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 5 பொறியாளர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளில் கமிஷன் பெறப்படுவதாக புகார் நிலவியது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் நேற்று காரைக்கால் மாவட்டத்தில் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
மதியம் காரைக்கால் கடற்கரையில் உள்ள சீகல்ஸ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். மாலையில் அவரை சந்திக்க கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன், உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் ஓட்டலுக்கு சென்றனர்.
அங்கு காத்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஓட்டலில் கூடியிருந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகளில் மற்றொரு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஆவணங்களின் பேரில், பிடிபட்ட 5 அதிகாரிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும்
-
திருச்சியில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை
-
மார்ச் 21-ஆம் தேதியை 'மண் காப்போம் தினமாக' அறிவித்தது அட்லாண்டா!
-
வட மதுரையில் பயங்கர வெடிச்சத்தம்; திடீர் பரபரப்பு
-
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
-
நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு
-
தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?