சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி விழா

பரமக்குடி : பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 62வது பங்குனி பொங்கல் விழா நடக்கிறது. கோயிலில் டிச.,21 மாலை பூத்தட்டுகளை ஏந்தி பக்தர்கள் நகர்வலம் வந்தனர்.
பின்னர் கோயிலில் இரவு பல்வேறு வண்ண மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. டிச.,25 இரவு காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா துவங்குகிறது. தினமும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்க உள்ளது.
ஏப்.,1 காலை அபிஷேகம், மாலை அக்னி சட்டி எடுத்தல், இரவு பொங்கல் வைபவம், 11:00 மணிக்கு மேல் அம்மன் கரகம் எடுத்து நகர் வலம் வர உள்ளார்.
ஏப்.,4 காலை பால்குடம், இரவு புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரமக்குடி சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சியில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை
-
மார்ச் 21-ஆம் தேதியை 'மண் காப்போம் தினமாக' அறிவித்தது அட்லாண்டா!
-
வட மதுரையில் பயங்கர வெடிச்சத்தம்; திடீர் பரபரப்பு
-
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
-
நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு
-
தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?
Advertisement
Advertisement