ஆசிய கூடைப்பந்து: இந்தியா தகுதி

மனாமா: ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
சவுதி அரேபியாவில், வரும் ஆக. 5-17ல் ஆசிய கோப்பை கூடைப்பந்து 31வது சீசன் நடக்க உள்ளது. இதற்கான 2ம் கட்ட தகுதிச் சுற்று பஹ்ரைனில் நடந்தது. இதில் இந்திய அணி 'எச்' பிரிவில் ஈராக், பஹ்ரைன் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது. முதல் போட்டியில் ஈராக்கை வீழ்த்திய இந்திய அணி, 2வது போட்டியில் பஹ்ரைனை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய இந்திய அணி 81-77 (25-20, 14-16, 23-17, 19-24) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ஹர்ஷ் தாகர் (28 புள்ளி), கன்வர் சாந்து (15), ஹபீஸ் (11), பிரனவ் பிரின்ஸ் (11) கைகொடுத்தனர்.
இரண்டு போட்டியிலும் வென்ற இந்தியா, 4 புள்ளிகளுடன் 'எச்' பிரிவில் முதலிடம் பிடித்து, 27வது முறையாக ஆசிய கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. தவிர, தொடர்ச்சியாக 11வது முறை ஆசிய கோப்பைக்குள் நுழைந்தது இந்தியா.
மேலும்
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு; தமிழக அரசு நாடகத்தை தொடர்ந்து நடத்தமுடியாது: அன்புமணி