லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்

புதுடில்லி: லக்னோ அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் (மார்ச் 24) நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, லக்னோ அணிகள் விளையாடுகின்றன. லக்னோ அணியில் இடம் பெற்றிருந்த இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான் 26, கடந்த டிசம்பரில் நடந்த விஜய் ஹசாரே டிராபியின் போது வலது முழங்கால் காயமடைந்தார். இதிலிருந்து முழுமையாக குணமடையாத இவர், பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகினார்.
மோசின் கானுக்கு பதிலாக இந்திய அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 33, தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீரர்கள் 'மெகா' ஏலத்தில் விலைபோகாத ஷர்துல், 'Registered Available Player Pool' அடிப்படையில் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தமானார். இதுவரை 168 'டி-20' போட்டியில் (189 விக்கெட்) பங்கேற்றுள்ள ஷர்துல், பஞ்சாப் (2015-16), புனே (2017), சென்னை (2018-21, 2024), டில்லி (2022), கோல்கட்டா (2023) அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
டில்லிக்கு எதிராக ஷர்துல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
-
பெண் மேலாளர் மரண வழக்கு: ஆதித்யா தாக்கரே மீது புதிய புகார்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு; தமிழக அரசு நாடகத்தை தொடர்ந்து நடத்தமுடியாது: அன்புமணி
-
ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்