ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்

புதுடில்லி: 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.

டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ஜம்மு காஷ்மீரின் ஷீத்தல் தேவி 18, ஒடிசாவின் பாயல் நாக் 17, மோதினர். இதில் ஷீத்தல் தேவி 109-103 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மீண்டும் தங்கம் வென்றார். ஏற்கனவே இவர், 2023ல் நடந்த முதல் சீசனில் தங்கம் வென்றிருந்தார்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உ.பி.,யின் ஜோதி 136-132 என டில்லியின் லால்பதியை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்ட்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் ஷியாம் சுந்தர் ஸ்வாமி 140-139 என சட்டீஸ்கரின் தோமன் குமாரை வீழ்த்தி தங்கம் வென்றார்.


வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜம்மு காஷ்மீரின் ராகேஷ் குமார் 143-140 என ஹரியானாவின் பர்மேந்தரை வீழ்த்தினார்.
இதுவரை 24 தங்கம், 31 வெள்ளி, 25 வெண்கலம் என 80 பதக்கம் வென்ற ஹரியானா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் தமிழகம் (24 தங்கம், 12 வெள்ளி, 21 வெண்கலம்), ராஜஸ்தான் (16 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம்) உள்ளன.

Advertisement