பள்ளிகளில் ஆண்டு விழா; கோலாகலமாக கொண்டாட்டம்

பொள்ளாச்சி அருகே, வக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ருக்மணி வரவேற்றார். ஆசிரியர் பிரேமலதா, ஆண்டறிக்கை வாசித்தார்.


தொடர்ந்து, முதல் மதிப்பெண், நன்னடத்தை, வருகைப்பதிவு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலைத் திருவிழாவில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றது. நிறைவாக, ஆசிரியர் அம்சவேணி நன்றி கூறினார்.


* ஆனைமலை அருகே, அர்த்தநாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சூர்யா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் உத்தர்ராஜ் வரவேற்றார்.ஆசிரியர் வேதா, ஆண்டறிக்கை படித்தார். ஆசிரியர் நாகரத்தினம் பேசினார்.


ஆசிரியர் சத்தியபிரியா, வானவில் மன்ற ஆசிரியர் கீர்த்தனா, எமிஸ் பொறுப்பாளர் கார்த்தி ஆகியோர் பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள் சுமன்ராஜ் மற்றும் செல்லம்மாள் விழாவை தொகுத்து வழங்கினர். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கருணாசேகரன் நன்றி கூறினார்.

* வால்பாறை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கலைசெல்வி தலைமை வகித்தார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கவுன்சிலர் காமாட்சி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆரியா, ஆசிரியை ஷீனா, சிறப்பு ஆசிரியை பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் அலாவுதீன் வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி கிளப் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தேஜஸ் ரோட்டரி கிளப் அமைப்பாளர் சக்கரபாணி, நிர்வாகிகள் சம்பத்குமார், மணிகண்டன் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






- நிருபர் குழு -

Advertisement