அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி

5

இம்பால்: அனைத்துப் பிரச்சினைகளையும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியும்; பேச்சுவார்த்தை நடந்தால், தீர்வு எட்டக்கூடியது தான் என்று மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர் கவாய் தெரிவித்தார்.


@1brஇம்பாலில் இன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டு 12 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு, ஐந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட குழுவை வழி நடத்திவரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டார்.

விழாவில் நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:

மணிப்பூர் இன மோதலுக்கான பேச்சுவார்த்தை இருந்தால் தீர்வு வெகு தொலைவில் இருக்காது. அனைத்துப் பிரச்னைகளையும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியும்.
பேச்சுவார்த்தை நடந்தால், தீர்வு எட்டக்கூடியதுதான்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் உள்ள அனைவரும் அமைதியை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். தற்போதைய நிலைமையைத் தொடர யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதை இந்த குழு அறிந்துள்ளது.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்புகிறார்கள்.
கவர்னரின் முயற்சியால் மணிப்பூரில் அமைதியும் இயல்பு நிலையும் விரைவில் மீட்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.

Advertisement