'வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும்'
சேலம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், 42வது மாநில மாநாடு தொடர்பான ஆயத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நேற்று, நடந்தது. அதில் பங்கேற்ற பின், மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
வரும் மே, 5ல் மதுராந்தகத்தில் மாநில மாநாடு நடக்கிறது. அதில், முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் பங்கேற்கின்றனர். அவர்களிடம், சாமானிய வணிகர்களை பாதுகாக்க, மத்திய - மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொதுக்குழுவில், சேலம் மாவட்டத்தில் இருந்து, 10,000 பேர் மாநாட்டில் பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் பெரியசாமி, மாநில இணை செயலர்கள் திருமுருகன், சுந்தர்ராஜ், தங்கவேல், மாவட்ட செயலர்கள் வர்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மாகரலில் வீணாகும் குடிநீர்
-
மாப்பிள்ளைக்கு தெரியும்: அமைச்சரை சொந்தம் கொண்டாடிய எம்.எல்.ஏ.,
-
கல்வி நிதியில் பாரபட்சம் கூடாது மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அறிவுரை
-
புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம் இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம்
-
ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ