வடமாநில சிறுமி தற்கொலை காதலன் போக்சோவில் கைது

குன்றத்துார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா, 19. இவர், அதே பகுதியைச் சேர்ந்த யாஷ்மதி போபோங், 16, என்ற சிறுமியை காதலித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன், ஜார்க்கண்டில் இருந்து சிறுமியை அழைத்து வந்த சோமா கோபா, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கத்தில் வாடகை வீடு எடுத்து, கணவன், மனைவி போல் வசித்தனர். திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், இருவரும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி யாஷ்மதி போபோங், இரவில் மொபைல் போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசியதால், சோமா கோபா அவரிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனால் யாஷ்மதி போபோங், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்றத்துார் போலீசார் உடலை மீட்டு, சோமா கோபாவை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement